புதுடெல்லி: அன்னிய செலாவணி மீறல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்பி மஹூவா மொய்த்ரா மற்றும் தொழில் அதிபர் தர்ஷன் ஹிராநந்தானி இன்று ஆஜராகும்படி அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. திரிணாமுல் திரிணாமுல் காங்கிரஸ் எம்பியாக இருந்த மஹூவா மொய்த்ரா(49) நாடாளுமன்றத்தில் கேள்விகளை கேட்க லஞ்சம் வாங்கினார் என பாஜ எம்பி நிஷிகாந்த் துபே குற்றம் சாட்டினார். துபாயை சேர்ந்த தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானி என்பவரிடம் இருந்து பணம் மற்றும் ஏராளமான பரிசுபொருட்களை வாங்கினார் என்றும் அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் மொய்த்ராவின் பதவியை பறித்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார். இதை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.நடைபெற உள்ள தேர்தலில் மொய்த்ரா மீண்டும் போட்டியிடுகிறார். மொய்த்ரா மற்றும் தர்ஷன் மீது அன்னிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி இருவருக்கும் அமலாக்கத்துறை நேற்று சம்மன் அனுப்பியுள்ளது.
The post இன்று ஆஜராக மஹூவா மொய்த்ராவுக்கு ஈடி சம்மன் appeared first on Dinakaran.