திருத்தணி அருகே ராமஞ்சேரியில் திரவுபதி அம்மன் கோயிலில் 110 வது ஆண்டு தீமிதி விழா

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ராமஞ்சேரியில் உள்ள 110 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீதிரவுபதி அம்மன் கோயிலில் 110வது ஆண்டாக நடைபெறும் தீமிதி திருவிழா கடந்த மே மாதம் 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தினமும் காலை, மாலை வேளைகளில் சிறப்பு பூஜை, அபிஷேகங்கள் ஆராதனைகளும் நடைபெற்றது. அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்று வந்தன.

மேலும் இந்த கோயிலில் தீ மிதி திருவிழாவை முன்னிட்டு, 350 பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்றினர். தீமிதி திருவிழாவில் சென்னை, திருவள்ளூர், ராமஞ்சேரி, தோமூர், புதூர், பட்டரைபெருமந்தூர், காஞ்சிப்பாடி, மேட்டுப்பாளையம், கூளூர், திருவாலங்காடு, கனகம்மாசத்திரம் உட்பட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

The post திருத்தணி அருகே ராமஞ்சேரியில் திரவுபதி அம்மன் கோயிலில் 110 வது ஆண்டு தீமிதி விழா appeared first on Dinakaran.

Related Stories: