நடுவழியில் பஸ்சை நிறுத்திவிட்டு போதையில் படுத்து தூங்கிய கண்டக்டர் அதிரடி சஸ்பெண்ட்

வேலூர்: காவேரிப்பாக்கத்தில் பயணிகளுடன் நடுவழியில் பஸ்சை நிறுத்திவிட்டு போதையில் தூங்கிய கண்டக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு மற்றும் சோளிங்கர் உள்ளிட்ட 2 இடங்களில் அரசு போக்குவரத்து பணிமனை இயங்கி வருகிறது. சோளிங்கர் பணிமனையில் இருந்து காவேரிப்பாக்கம், திருத்தணி, அரக்கோணம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது.

மேலும் காவேரிப்பாக்கம் பேரூராட்சி பகுதியில் இருந்து தடம் எண்.51 அரசு பஸ் நேற்று மாலை காவேரிப்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து 3 மணிக்கு செல்ல வேண்டிய அரசு பஸ் 3.40 மணிக்கு சென்றுள்ளது. அப்போது அரசு பஸ்சில் அதிகளவில் பெண்கள் பயணம் செய்துள்ளனர். அரசு பேருந்து பஸ் நிலையத்தில் இருந்து பஜார் வழியாக சோளிங்கர் நோக்கி சென்றது. அப்போது அரசு பஸ் கண்டக்டர் சிவக்குமார் அதிக மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதில் போதை தலைக்கேறிய உடன், பேரூராட்சி மாங்காளி அம்மன் கோயில் அருகே சென்றபோது, பேருந்தை நிறுத்திவிட்டு கோயில் வளாகத்தில் கண்டக்டர் சிவக்குமார் படுத்து தூங்கி உள்ளார். இதனால் அவதியடைந்த பொதுமக்கள் ஆட்டோவில் பயணம் செய்தனர். பின்னர், பஸ் பயணிகள் இல்லாமல் சோளிங்கர் நோக்கி சென்றது. இச்சம்பவத்தை தொடர்ந்து, மது போதையில் பஸ்சை நிறுத்தி விட்டு, பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்திய கண்டக்டர் சிவக்குமாரை சஸ்பெண்ட் செய்து, வேலூர் அரசு மண்டல போக்குவரத்து கழக பொதுமேலாளர் இன்று உத்தரவிட்டுள்ளார்.

The post நடுவழியில் பஸ்சை நிறுத்திவிட்டு போதையில் படுத்து தூங்கிய கண்டக்டர் அதிரடி சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Related Stories: