அடுத்து காலிறுதி ஆட்டத்தில் துளசிமதி நேற்று ஜப்பான் வீராங்கனை அகிகோ சுகினோ உடன் மோதினார். அதையும் 26நிமிடங்களிலேயே 21-6, 21-15 என நேர் செட்களில் வென்ற துளசிமதி அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார். மற்றொரு மகளிர் காலிறுதியில் தமிழ்நாட்டின் மனிஷா ராமதாஸ் 21-5, 21-3 என நேர் செட்களில் ஹாங்காங் வீராங்கனை மிங் வோங்கை வென்று அரையிறுதிக்குள் நுழைந்துள்ளார். இந்த ஆட்டம் 18 நிமிடங்களில் மின்னல் வேகத்தில் முடிந்தது.மகளிர் இரட்டையர் பிரிவிலும் துளசிமதி/மானசி ஜோஷி இணை அரையிறுதியில் விளையாட உள்ளது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் தமிழ்நாட்டின் நவீன் சிவகுமார் 19-21, 21-16, 21-12 என்ற செட்களில் சக வீரர் யோகேஷை வென்று அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளார்.
The post ஆசிய பாரா சாம்பியன்ஷிப் பேட்மின்டன் மின்னலாய் ஆடிய துளசிமதி 18 நிமிடங்களில் வெற்றி; அரையிறுதியில் தமிழக வீராங்கனை appeared first on Dinakaran.
