தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் வெள்ளத்தில் சிக்கித்தவித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 3 நாட்களுக்கு பின் பத்திரமாக மீட்பு..!!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் வெள்ளத்தில் சிக்கித்தவித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீட்டனர். வெள்ளம் சூழ்ந்த வீட்டில் சிக்கி தவித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக ஏரல், சாத்தான்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. இதனிடையே, கடந்த 17ம் தேதி சாத்தான்குளம் பகுதியில் மீட்பு பணிகளில் ஈடுபட அமைச்சர் ராதாகிருஷ்ணன் சென்றிருந்தார். அங்குள்ள மக்களுக்கு உணவு பொட்டலங்கள், போர்வைகள் உள்ளிட்டவைகளை வழங்கிவிட்டு பின்னர் ஏரல் பகுதிக்கு மீட்பு பணிக்கு சென்றார்.

இதையடுத்து, ஏரலில், கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்று பாலம் மூழ்கியதால் சாலைகள் துண்டிக்கப்பட்டன. தொலை தொடர்பு சாதனங்களும் இயங்காததால், 3 நாட்களாக அப்பகுதியில் அமைச்சர் ராதாகிருஷ்ணன் சிக்கி தவித்தார். அவரை யாரும் தொடர்புகொள்ள இயலவில்லை. தற்போது அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு படிப்படியாக குறைந்துள்ள சூழலில் நிலை சரக டிஐஜி உள்ளிட்டோர் அப்பகுதியில் முகாமிட்டு பொதுமக்களை மீட்கும் பணியின் போது அமைச்சரையும் தீயணைப்புத்துறை வாகனம் மூலம் பத்திரமாக மீட்டனர். இதன் மூலம் 3 நாட்களாக வெள்ளத்தில் சிக்கித்தவித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

The post தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் வெள்ளத்தில் சிக்கித்தவித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 3 நாட்களுக்கு பின் பத்திரமாக மீட்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: