தொல்காப்பியம் செயலி

எக்காலத்திலும் , மொழியும் சரி கலாச்சாரங்களும் சரி அந்தந்த காலத்திற்கேற்ப மாற்றம் பெற்றும் தானாகவே தன்னை அப்டேட் செய்துகொள்ளும். அப்படித்தான் தமிழ் மொழியும் அதன் பழமையும் தன்னைத்தானே விதவிதமாகப் புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது. அப்படி தமிழின் முதல் நூல் எனப் போற்றப் படும் ‘தொல்காப்பியம்’ நூல் மொபைல் செயலி வடிவத்தில் உருவாக்கப்பட்டு கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது. இத்தகைய சிறந்த தொல்காப்பியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பை 2021-ம் ஆண்டு செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்டது. அதைத் தொடர்ந்து, தொல்காப்பியம் சார்ந்த செல்போன் செயலியை வடிவமைக்கும் முயற்சியில் செம்மொழி நிறுவனம் ஈடுபட்டு வந்தது. அதன் பலனாக சிஐசிடி தொல்காப்பியம் எழுத்து (CICT தொல்காப்பியம் எழுத்து) (PHONOLOGY & MORPHOLOGY MOBILE APPLICATION) என்ற பெயரில், எழுத்து அதிகாரத்துக்கான செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் செம்மொழி நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த செயலியில் தொல்காப்பியப் பாடல்கள் இசையுடன் ஒலிக்கும். மேலும் குழந்தைகளுக்கும் இசையுடன் ஒலிக்கும் தொல்காப்பியத்தை மொபைலில் காண்பிக்க அவர்களும் ஆர்வமாகக் கற்க

வாய்ப்புகள் அதிகரிக்கும்.

ஆஹா முந்திரி

உடலுக்கு தேவையான நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிம தாது, இரும்பு, காப்பர், செலினியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், மற்றும் துத்தநாகம் போன்ற கனிம தாதுப்பொருட்கள் அதிக அளவில் உள்ளது. புற்றுநோயினை வராமல் தடுக்கிறது. தினசரி சிறதளவு முந்திரிப் பருப்பைச் சாப்பிட்டுவந்தால், ரத்தஅழுத்தம் சீராக இருக்கும். அதிகளவில் புரோட்டீன் இருப்பதால் ஒரு நாள் முழுவதும் நீங்கள் களைப்படையாமல் உற்சாகமாக இருப்பீர்கள். முந்திரி பருப்பில் விட்டமின் சி, தயமின், விட்டமின் பி6, மக்னீசியம், ஜிங்க், காப்பர், இரும்புச் சத்து மற்றும் பொட்டாசியம் போன்ற ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. இதில் அதிகளவில் டிரிப்டோபான் அமினோ அமிலம் இருப்பதால் இவை செரோடோனின் சுரப்பை தூண்டி மனநிலையை அமைதியாக்கு கிறது. மேலும் ஹார்மோனை சம நிலையாக்கி, மெட்டபாலிசத்தை அதிகரித்து ஆரோக்கியமான உடல் நலனை காக்க உதவுகிறது. இதில் அதிகளவில் நார்ச்சத்து இருப்பதால் நமக்கு நீண்ட நேரம் பசி ஏற்படாது மற்றும் செரிமான உறுப்புகள் நலனுக்கு பயனளிக்கும் என்று 2014 ல் அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனால் வெளியிடப்பட்ட ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது.

The post தொல்காப்பியம் செயலி appeared first on Dinakaran.

Related Stories: