புதுச்சேரியில் இருந்து மெத்தனால் கொண்டு வரப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை : விஷச் சாராய விவகாரம் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானங்கள் மீதான விவாதத்துக்கு பதில் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், “விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த மிகவும் துயரமான சம்பவம் குறித்து உங்களை போலவே நானும் மிகுந்த வேதனையும் வருத்தமும் அடைகிறேன். புதுச்சேரியில் இருந்து மெத்தனால் கொண்டு வரப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் உயிர் காக்கும் மருந்துகள் கையிருப்பில் உள்ளன. கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் வழக்கில் தொடர்புடைய நபர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்படுவர்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post புதுச்சேரியில் இருந்து மெத்தனால் கொண்டு வரப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Related Stories: