ஜன.8ல் தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்!!

சென்னை : சென்னை வெங்கட்நாராயணா சாலை, சேமியர்ஸ் சாலை பகுதிகளில் ஜன.8ல் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்தியில், “சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் வெங்கட்நாராயணா சாலை, சேமியர்ஸ் சாலை பகுதிகளில் மெட்ரோ பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் ஜனவரி 8ம் தேதி காலை 6 மணி முதல் 9ம் தேதி காலை 6 மணி வரை தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு ஆகிய 3 மண்டலங்களில் குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் நிறுத்தப்படுகிறது.

ஆகவே, முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்துக் கொள்ளவும்.
குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு தினசரி லாரிகள் மூலம் இலவச நடைகளாக வழங்கப்படும் குடிநீர் தடையின்றி வழக்கம்போல் வழங்கப்படும்.
அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் (Dial for Water) குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.

The post ஜன.8ல் தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்!! appeared first on Dinakaran.

Related Stories: