தமிழ் மூத்த மொழியாக கருதப்படும் என்பதால் கீழடி ஆய்வை ஒன்றிய பாஜ அரசு மறுக்கிறது: திமுக மாணவர் அணி செயலாளர் பேட்டி

சென்னை: திமுக மாணவர் அணி செயலாளர் ராஜிவ்காந்தி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று அளித்த பேட்டி: சாதி, மதம் கடந்து ஓரணியில் நின்றதால் தமிழ்நாடு அனைத்திலும் தனித்து நிற்கிறது. இங்கிலாந்து பல்கலைக்கழகம் 2500 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் இப்படித்தான் வாழ்ந்தார்கள் என அறிவியல் பூர்வமாக தெரிவித்துள்ளது. ஆய்வு முறைகளை அங்கீகரிக்காமல் ஆதாரம் தேவை என புராணங்களில் இதிகாச புரட்டுகளில் கற்பனைகளில் ஆய்வு அறிவியல் சொல்லும் பாஜ அரசு, ராமர் பாலம் அறிவியலாக நிரூபிக்கப்படாதபோது சேது சமுத்திர திட்டத்தை தடுத்த அரசு இன்று நமக்கு கற்பிக்கிறது.

தமிழ் மூத்த மொழியாக கருதப்படும் என்பதால் கீழடி ஆய்வை ஒன்றிய பாஜ அரசு மறுக்கிறது. மக்கள் மன்றத்தில் நாம் பேச வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். பாஜவினர் தமிழுக்கு, தமிழர்களுக்கு விரோதி. அண்ணாமலை பட்டம் படித்தவரா என்ற சந்தேகம் வருகிறது. தமிழ்நாட்டின் உணர்வை புரிந்தவரா என்ற சந்தேகம் எழுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post தமிழ் மூத்த மொழியாக கருதப்படும் என்பதால் கீழடி ஆய்வை ஒன்றிய பாஜ அரசு மறுக்கிறது: திமுக மாணவர் அணி செயலாளர் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: