சென்னை:தமிழ்நாடு பாடத்திட்டத்தை அறிந்து கொள்ள விடுமுறைக்கு தமிழ்நாடு வந்துள்ள அமெரிக்க வாழ் தமிழ் மாணவர்கள் அரசு பள்ளிகளில் மாணவர்களுடன் அமர்ந்து புதிய அனுபவங்களை பெற்று வருகின்றனர். விடுமுறைக்கு சுற்றுலா செல்வது அனைவர்க்கும் பிடித்தமான ஒன்றாகவே இருக்கும். அதிலும் வெளிநாட்டில் தங்கி இருக்கும் தமிழர்களுக்கு தாயகம் திரும்புவதும், சொந்த ஊருக்கு செல்வதும் பெரும் அந்த வகையில் அமெரிக்காவில் படித்து வரும் தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட 6 மாணவர்கள் விடுமுறையை பயனுள்ளதாக மாற்ற இரண்டு வார சிறப்பு பயிற்சிக்காக சென்னை அரும்பாக்கம் அரசு மேல்நிலை பள்ளிக்கு சென்றுள்ளனர்.
வகுப்புகளில் பங்கேற்ற மாணவர்கள் அமெரிக்கா பள்ளிகளுக்கு இணையாக தமிழ்நாடு அரசு பள்ளிகளில் கல்வி கற்பிக்கப்படுவதாக கூறினர். செயல்பாடு முறையிலான தாங்கள் கற்கும் கல்வி இங்கு புத்தகம் வடிவில் சொல்லி கொடுக்கப்படுவதாக தெரிவித்த மாணவர்கள்
அங்கு 90 நிமிடம் வகுப்பு நடக்கும் ஆனால் இங்கு 45 நிமிடம் இருக்கிறது என்று தெரிவித்தனர். அமெரிக்காவில் பயிலும் மாணவர்கள் தங்கள் தாய்நாட்டில் தமிழ் மொழியில் வகுப்பறைகளில் அமர்ந்து வகுப்புகளை கவனிப்பது மாணவர்களுடன் கலந்துரையாடுவது ஒரு புதிய அனுபவத்தை கொடுத்திருக்கும் என்கின்றனர் ஆசிரியர்கள்.
The post தமிழ்நாட்டு பாடத்திட்டத்தை அறிந்து கொள்ளும் அமெரிக்க வாழ் தமிழ் மாணவர்கள்: பாடத்திட்டம் பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருப்பதாக மாணவர்கள் கருத்து appeared first on Dinakaran.