சென்னை: விதிமீறி 26 மாணவர்களுக்கு சேர்க்கை வழங்கிய புதுச்சேரி மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்துக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 26 மாணவர்களை விடுவித்து இந்திய மருத்துவ கவுன்சில் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து புதுச்சேரி கல்வி நிறுவனம் 2018-ல் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி, 26 மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை கூடாது அவர்களின் படிப்பு நிறைவு சான்றை வழங்க வேண்டும் என தெரிவித்ததுடன் 2025-26 மற்றும் 2026-27ம் கல்வி ஆண்டுகளில் தலா 13 மருத்துவ இடங்களை அரசிடம் ஒப்படைக்க உத்தரவிட்டதுடன் தமிழ்நாடு ஸ்பாஸ்டிக் சொசைட்டிக்கு ரூ.10 லட்சம், அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் செலுத்த ஐகோர்ட் ஆணையிட்டது.
The post மருத்துவ அறிவியல் நிறுவனம்: ரூ.20 லட்சம் அபராதம் appeared first on Dinakaran.