குமரி: கோவை மாவட்டம் மதியழகன் நகர் பகுதியை சேர்ந்த, தவசி – மலர் என்ற தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 3 வயதுடைய நிரஞ்சனா என்ற குழந்தையும், ஒன்றரை வயதுடைய தர்ஷினி என்ற குழந்தையும் உள்ளனர். தவசி குடும்பத்தினர் தற்போது கன்னியாகுமரியில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் மதுரையில் உள்ள தவசியின் தங்கை விஜயலட்சுமிக்கு குழந்தை பிறந்ததையொட்டி அவரை பார்ப்பதற்காக தவசியின் மனைவி மற்றும் மூத்த மகளான நிரஞ்சனா ஆகியோர் மதுரைக்கு சென்றுள்ளனர். இதனால் தவசி மற்றும் அவரது இளைய மகள் ஆகியோர் தங்களது வீட்டில் இருந்துள்ளனர். அப்போது இளைய மகள் தர்ஷினி திடீரென காணவில்லை.
அதிர்ச்சியடைந்த தவசி குழந்தையை தேடியுள்ளார். அப்போது வீட்டில் தண்ணீர் நிரம்பியிருந்த வாளியில் குழந்தை இருந்துள்ளது. பதட்டமடைந்த தவசி உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குழந்தையின் சடலம் உடற்கூராய்விற்காக அனுப்பிவைக்கப்பட்டது. ஒன்றரை வயதுடைய பச்சிளம் குழந்தை தண்ணீர் நிரம்பிய வாளியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post தண்ணீர் நிரம்பிய வாளியில் தவறி விழுந்த சிறுமி உயிரிழப்பு appeared first on Dinakaran.