நீலகிரி மாவட்டத்தில் நவீன கேமராக்களுடன் Fast tag முறை கொண்டு வரப்படும்: மாவட்ட ஆட்சியர் பேட்டி

நீலகிரி: நீலகிரி மாவட்டத்திற்கு வரும் வாகனங்களின் இ-பாஸை கண்காணித்து, பசுமை வரியை தானாக வசூலிக்க விரைவில் நவீன கேமராக்களுடன் Fast tag முறை கொண்டு வரப்படும் என்று நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு பேட்டி அளித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்திற்கு வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறைக் காலங்களில் ஆயிரக்கணக்கான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வருவதால் இ-பாஸ் கண்காணிப்பு மற்றும் பசுமை வரி வசூலிப்பதில் காலதாமதம் ஏற்பட்டு மாவட்ட எல்லையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இதனை அடுத்து போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், இ-பாஸ் நடைமுறையை நவீன தொழில்நுட்பம் மூலம் கண்காணிக்கவும் மாவட்ட நிர்வாகம் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.

The post நீலகிரி மாவட்டத்தில் நவீன கேமராக்களுடன் Fast tag முறை கொண்டு வரப்படும்: மாவட்ட ஆட்சியர் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: