சூடானில் உள்நாட்டு போரால் இதுவரை 413 பேர் பலி 3,551 பேர் காயம்: உலக சுகாதார நிறுவனம் தவிப்பு

ஜெனிவா: சூடான் நாட்டின் ராணுவத்திற்கும், துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகளுக்கும் இடையே நடந்து கடுமையான மோதல்கள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. இந்தியா உள்ளிட்ட உலகின் பல நாடுகளை சேர்ந்த மக்கள் சூடானில் வசிப்பதால், அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மார்கரெட் ஹாரிஸ் கூறுகையில்:
சூடானில் நடைபெற்று மோதலில் இதுவரை 413 பேர் இறந்துள்ளனர் மற்றும் 3,551 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த 15ம் தேதி முதல் இதுவரை 11 மோசமான தாக்குதல்கள் நடந்துள்ளன. உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகின்றன. அதிக எண்ணிக்கையிலான மக்கள் ேபாரில் சிக்கியிருப்பதால், அவர்களுக்கான உதவிகளை செய்ய முடியவில்லை.

அவர்களின் அடிப்படை பிரச்னைகளை கூட தீர்க்க முடியவில்லை. சூடானில் குளிர்காலம் தொடங்கியதால் 40 மில்லியன் டாலர் மதிப்புள்ள தடுப்பூசிகள் மற்றும் இன்சுலின் ஆகியவை தயாராக உள்ளன. ஆனால் அவற்றை மக்களுக்கு அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. யுனிசெப் உதவியுடன் தேவையான வசதிகள் செய்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

The post சூடானில் உள்நாட்டு போரால் இதுவரை 413 பேர் பலி 3,551 பேர் காயம்: உலக சுகாதார நிறுவனம் தவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: