இந்த பராமரிப்பு பொருட்களை மாணாக்கர்கள் சரிவர வாங்குவதில்லை என்பதை அறிந்த தாட்கோ பொலிவு என்ற புதிய திட்டத்தை உருவாக்கியது. ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த சுமார் 35 ஆயிரம் பள்ளி மாணவர்கள் 15 ஆயிரம் கல்லூரி மாணவர்கள், பழங்குடியினர் வகுப்பை சார்ந்த 10 ஆயிரம் மாணாக்கர்கள் என 60 ஆயிரம் பேர் பயனடையும் வகையில் இந்த மாத இறுதியிலிருந்து பொலிவு பராமரிப்பு தொகுப்புகள் வழங்கப்பட உள்ளது. பொலிவு திட்டம் மாணாக்கர்களுக்கு பயனளிப்பதோடு மகளிருக்கு வேலை வாய்ப்பையும் உருவாக்கி இருப்பதால் மாணாக்கர்களும், மகளிரும் இத்திட்டத்தை வரவேற்று அரசிற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
The post மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட தாட்கோவின் “பொலிவு திட்டம்: வரும் நாட்களில் கூடுதலான பொருட்களை சேர்க்க முடிவு appeared first on Dinakaran.
