சில்லி பாயின்ட்…

* இன்டர்கான்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் பைனலில் 2-0 என்ற கோல் கணக்கில் லெபனான் அணியை வீழ்த்திய இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் இந்திய அணிக்கு ரூ.1 கோடி ரொக்கப் பரிசு அறிவித்துள்ள நிலையில், பாலசோர் ரயில் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நன்கொடை வழங்குவதாக இந்திய வீரர்கள் அறிவித்துள்ளனர்.

* இந்திய அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாட முன்வராத வரை, ஐசிசி உலக கோப்பை தொடர் உள்பட எந்த போட்டியில் விளையாடுவதற்காகவும் பாகிஸ்தான் அணி இந்தியா செல்லக் கூடாது என்று பாக். முன்னாள் வீரர் ஜாவேத் மியான்தாத் கூறியுள்ளார்.

* வங்கதேசத்துடன் ஒருநாள் போட்டித் தொடரில் (ஜூலை 5, 8, 11) மோதவுள்ள ஆப்கானிஸ்தான் அணியில் 5 புதுமுக வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

* இந்தோனேசியா கால்பந்து அணியுடன் நடந்த நட்புரீதியிலான போட்டியில் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இந்த போட்டியில் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி விளையாடாதது குறிப்பிடத்தக்கது.

* விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் ஜூலை 3ம் தேதி தொடங்கி 16ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான பரிசுத் தொகை கடந்த ஆண்டை விட 11.2% அதிகரிக்கப்பட்டுள்ளது.

The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.

Related Stories: