சில்லி பாயின்ட்…

* அகமதாபாத் மோடி அரங்கம் மற்றும் சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்க ஆடுகளங்களுக்கு ‘சராசரி’ என மதிப்பீடு வழங்கப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. 300+ ரன் குவிக்கப்படும் பிட்ச்கள் மட்டுமே சூப்பரானவை அல்ல. பந்துவீச்சாளர்களின் உழைப்புக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்று இந்திய அணி தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

* நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி 4 லீக் ஆட்டங்களில் 3 தோல்விகளை சந்தித்துள்ள நிலையில், ‘நாங்கள் அரையிறுதிக்கு முன்னேறுவது என்பது மிக மிகக் கடினம். ஆனாலும், நம்பிக்கையை இழக்காமல் தொடர்ந்து போராடுவோம். இந்த சூழ்நிலையில் எங்களுக்கு வேறு வழியில்லை’ என்று அந்த அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் கூறியுள்ளார்.

* இத்தாலியின் ஒல்பியா நகரில் நடந்த ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரித்விக் சவுதாரி – அர்ஜுன் காடே இணை சாம்பியன் பட்டம் வென்றது. பைனலில் செர்பியாவின் இவான் சபனோவ் – மதேஜ் சபனோவ் ஜோடியுடன் மோதிய ரித்விக் – அர்ஜுன் இணை 6-1, 6-3 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை முத்தமிட்டது.

The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.

Related Stories: