இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிக்க எதிர்ப்பு தெரிவித்ததற்கு எதிரான வழக்கு ஜூலை 7-க்கு ஒத்திவைப்பு!

சென்னை: இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிக்க எதிர்ப்பு தெரிவித்ததற்கு எதிரான வழக்கு ஜூலை 7-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் எந்த உத்தரவும் இல்லாமல் நீதிமன்றம் தலையிட முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முதல்வருக்கும் ஆளுநருக்கும் இடையிலான கடிதப் போக்குவரத்து குறித்து கேள்வி எழுப்ப முடியாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
செந்தில் பாலாஜி எந்தத் தகுதியின் அடிப்படையில் பதவியில் நீடிக்கிறார் என விளக்கம் கேட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்தன் மனுவும், இந்த வழக்குடன் சேர்த்து உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தியது.

The post இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிக்க எதிர்ப்பு தெரிவித்ததற்கு எதிரான வழக்கு ஜூலை 7-க்கு ஒத்திவைப்பு! appeared first on Dinakaran.

Related Stories: