பள்ளி மாணவர் திடீர் மாயம்: இரு மாநில போலீஸ் தேடுகிறது

நாகர்கோவில்: கேரள மாநிலம் திருவனந்தபுரம் நெய்யாற்றின்கரை அதியனூர் வலியவிளை பகுதியை சேர்ந்தவர் சஞ்சு. இவரது மகன் ஆதர்ஸ் சஞ்சு (15). இவன் அதே பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் 10ம் வகுப்பு படித்து வருகிறான். ஆதர்ஸ் சஞ்சுவுக்கு படிப்பில் ஆர்வம் குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் படிப்பை விட்டுவிட்டு வேலைக்கு செல்ல விருப்பம் உள்ளதாக சக நண்பர்களிடம் ஆதர்ஸ் சஞ்சு அடிக்கடி கூறுவானாம். இந்தநிலையில் ஆதர்ஸ் சஞ்சு கடந்த 20ம் தேதி காலை வழக்கம்போல் சீருடை அணிந்து பள்ளிக்கு புறப்பட்டு சென்றான். பள்ளி முடிந்த பின்பு வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த ஆதர்ஸ் சஞ்சுவின் பெற்றோர் நண்பர்கள் வீடு, உறவினர் வீடுகளில் தேடியும் எந்த தகவலும் கிடைக்காததால், அவரது பொழியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆதர்ஸ் சஞ்சுவின் நண்பர்களிடம் விசாரித்தபோது, மார்த்தாண்டம், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் வேலைக்கு சென்றால் நன்றாக இருக்கும் என்று அடிக்கடி நண்பர்களிடம் கூறியிருப்பது தெரியவந்தது. எனவே கேரள போலீசார் நேற்று மார்த்தாண்டம், களியக்காவிளை பகுதிக்கு வந்து இங்குள்ள சிறு சிறு நிறுவனங்கள் உள்பட பல இடங்களில் மாணவரை தேடினர். அவர்களுடன் குமரி போலீசாரும் இணைந்து தேடினர்.

The post பள்ளி மாணவர் திடீர் மாயம்: இரு மாநில போலீஸ் தேடுகிறது appeared first on Dinakaran.

Related Stories: