இராமநாதசுவாமி திருக்கோயிலில் வருகிற 27ம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெறும் என அறிவிப்பு!!

சென்னை : இராமநாதசுவாமி திருக்கோயிலில் வருகிற 27ம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்,”அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், இராமேசுவரம் சுபஸ்ரீ சோபகிருது வருடம் 27.12.2023 மார்கழி மாதம் 11ம் தேதி புதன் கிழமை ஆருத்ரா தரிசனம் பஞ்சமூர்திகள் எழுந்தருளல். திருக்கோயில் அதிகாலை 2.00 மணிக்கு நடைதிறந்து அதிகாலை 3.00 மணி முதல் 3.30 மணி வரை ஸ்படிக லிங்க பூஜையும் தொடர்ந்து திருப்பள்ளிஎழுச்சி பூஜையும் நடைபெறும்.

அதிகாலை 3.00 மணிக்கு சபாபதி சன்னதியில் ஸ்ரீ நடராஜருக்கு அபிஷேகமும் காலை 4.15 மணிக்கு மாணிக்கவாசகர் புறப்பாடும் நடைபெறும்காலை 5.15 மணிக்கு ஆருத்ரா தரிசனம் தீபாராதனை நடைபெறும். காலை 10.00 மணிக்கு ஸ்ரீ நடராஜர் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு வீதி உலா பகல் 12.00 மணிக்கு தீர்த்தவாரி நடைபெறும். இரவு 7.30 மணிக்கு ஊஞ்சல் நலுங்கு வைபவம் தீபாராதனை, சுவாமி அம்பாள் ஏக சிம்மாசனத்தில் எழுந்தருளல் வீதி உலா நடைபெறும் என்ற விபரம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இராமநாதசுவாமி திருக்கோயிலில் வருகிற 27ம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெறும் என அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: