மழை பாதிப்பு மாவட்டங்களில் மீண்டும் பள்ளிகள் திறக்க ஆய்வு: 14 அதிகாரிகள் நியமனம்

சென்னை: தென் மாவட்டங்களில் கடந்த வாரம் பெய்த பெரு மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போதுபள்ளிகளை திறப்பதற்கு முன்னதாக மேற்கொள்ள வேண்டிய பணி்கள் குறித்து ஆய்வு செய்ய 14 இணை இயக்குநர்களை பள்ளிக் கல்வித்துறை நியமனம் செய்துள்ளது. தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் கடந்த தென் மாவட்டங்களில் கன்னிகுமரி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் பெரு மழை பெய்தது. அதனால் அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. தற்போது அந்த மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை மீட்பது உள்ளிட்ட நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. படிப்படியாக மேற்கண்ட மாவட்டங்களில் நிலைமை சீரடைந்து வருகிறது.

இதையடுத்து, அந்த மாவட்டங்களில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அதற்கு முன்னதாக பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக இணை இயக்குநர் அளவில் கல்வி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மேற்கண்ட 4 மாவட்டங்களில் பள்ளிகளில் நேரடியாக ஆய்வு செய்து, அறிக்கை அனுப்பவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதன்படி, தென்காசி மாவட்டத்துக்கு, இணை இயக்குநர்கள் செல்வகுமார், ஞானசவுந்தரி, திருநெல்வேலி மாவட்டத்துக்கு இணை இயக்குநர்கள் தேவி, ஜெயக்குமார், சாந்தி, முனுசாமி, தூத்துக்குடி மாவட்டத்துக்கு இணை இயக்குநர்கள் செல்வராஜ், அமுதவல்லி, ராமசாமி, கோபிதாஸ், கன்னியாகுமரி மாவட்டத்துக்கு இணை இயக்குநர்கள் பொன்னையா, அய்யண்ணன், ராமகிருஷ்ணன், சுவாமிநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று முதல் தங்களுக்கான பணியை தொடங்குவார்கள்.

The post மழை பாதிப்பு மாவட்டங்களில் மீண்டும் பள்ளிகள் திறக்க ஆய்வு: 14 அதிகாரிகள் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: