புதுக்கோட்டையில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் உரங்கள் கிடைக்க நடவடிக்கை

*டிஆர்ஓ தகவல்

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தலைமையில் நேற்று) நடைபெற்றது.பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்ததாவது;மழையளவு, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழையளவு 807.10 மி.மீ. ஆகும். 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி வரையில் 817.57 மி.மீ மழையளவு பெறப்பட்டுள்ளது. பருவம் வாரியாக இயல்பான மற்றும் பெறப்பட்டுள்ள மழையளவானது கீழ்க்கண்டவாறு தெரிவிக்கப்படுகிறது.

குளிர்கால பருவத்தில் (ஜனவரி, பிப்ரவரி) இயல்பான மழையாளவான 41.5 மி-மீ பதிலாக 59.11 மி.மீட்டருடன் 42.44 சதவீதம் கூடுதலாகவும், அதிகபட்சமாக பிப்ரவரி மாதத்தில் 58.49 மி.மீட்டர் கிடைக்கப்பெற்றுள்ளது. கோடை கால பருவத்தில் (மார்ச், ஏப்ரல், மே) இயல்பான மழையளவான 90.5மி.மீட்டருக்கு பதிலாக 167.13 மி.மீட்டருடன், 84.7 சதவீதம் கூடுதலாகவும், அதிகபட்சமாக ஏப்ரல் (30.07 மி-மீ) மே (125.13 மி.மீ) மாதங்களில் கிடைக்கப்பெற்றுள்ளது.

தென்மேற்கு பருவ மழை (ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர்) காலத்தில் இயல்பான மழையளவான 303.5 மி-மீட்டருக்கு பதிலாக 295.4 மி.மீட்டருடன் 2.7 சதவீதம் குறைவாக மழை பெறப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழை (அக்டோபர், நவம்பர், டிசம்பர்) காலத்தில் இயல்பான மழையளவான 371.60 மி.மீட்டருக்கு பதிலாக இதுவரையில் 295.92 மி.மீட்டர் 19.8 சதவீதம் மழை குறைவாக பெறப்பட்டுள்ளது.

இடுபொருட்கள் இருப்பு, மாவட்டத்திலுள்ள 33 வேளாண்மைவிரிவாக்க மையங்களில் 114.401 மெ.டன் சான்று பெற்ற நெல்விதைகளும், 26.605 மெ.டன் பயறு விதைகளும், 21.207 மெ.டன்நிலக்கடலை விதைகளும், 4.100 மெ.டன் சிறுதானிய விதைகளும், 0.817 மெ.டன் எள் விதைகளும் இருப்பில் உள்ளன. விவசாயிகள் தரமான சான்று பெற்ற விதைகளை வேளாண்மை விரிவாக்க மையங்களிலிருந்து பெற்றுச் சாகுபடி செய்து பயனடையலாம்.விதை விற்பனை உரிமம் பெற்றகூட்டுறவு மற்றும் தனியார் விற்பனை மையங்களிலும் சான்று பெற்றவிதைகள் விநியோகம் செய்திடத் தக்க நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளது.

விவசாயிகள் மழையளவு நீர் இருப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு நடப்பு மார்கழி பட்டத்தில் குறைந்த அளவு நீர் தேவைப்படும் கேழ்வரகு, நிலக்கடலை, எள், உளுந்து ஆகிய பயிர்களை தேர்வு செய்து சாகுபடி மேற்கொள்ள திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.உர இருப்பு விவரம், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு டிசம்பர் 2023 மாதத்திற்குத் தேவையான யூரியா விநியோகத் திட்ட இலக்கின் படி 3220 மெ.டன்களுக்கு, இது வரை 1688 மெ.டன் யூரியா பெறப்பட்டுள்ளது. மாவட்டத்திற்குத் தேவையான டி.ஏ.பி. உரம் 450 மெ.டன்களுக்கு 369 மெ.டன் வரப்பெற்றுள்ளது. பொட்டாஷ் உரம் 0 மெ.டன்களுக்கு 523 மெ.டன்களும், காம்ப்ளக்ஸ் உரங்களைப் பொறுத்தவரை விநியோகத் திட்ட இலக்கான 1850 மெ.டன்களுக்கு இது வரை 1598 மெ.டன் பெறப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்குத் தேவையான தரமான உரங்கள் தடையின்றி உரிய நேரத்தில் கிடைக்க, தக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது யூரியா 5881 மெ.டன்னும், டிஏபி 700 மெ.டன்னும், பொட்டாஷ் 2123 மெ.டன்னும், காம்ப்ளக்ஸ் 5963 மெ.டன்னும் கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் உர உரிமம் பெற்ற தனியார் நிறுவனங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு கூட்டுறவுச் சங்கத்தில் மட்டும் 1015 மெ.டன் யூரியா, 127 மெ.டன்டிஏபி, 469 மெ.டன் பொட்டாஷ், 842 மெ.டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. டிஏபிக்கு பதிலாக எம்ஏபி மாற்று உரம், மோனோ அமோனியம் பாஸ்பேட் என்ற 11 சதம் தழைச்சத்து 52 சதம் மணிச்சத்துடன் தற்பொழுது விற்பனை செய்யப்படும் எம்ஏபி உரத்தினை டிஏபி-க்கு பதிலாக வாங்கி பயன்படுத்திடகேட்டுக்கொள்ளப்படுகிறது.

எனவே, விவசாயிகள் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மானியத் திட்டங்களை பெறுவதற்கு வேளாண்மை விரிவாக்க மையத்தினை அணுகி உழவன் செயலி மூலம் முன்பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறது. நடப்பு ஆண்டு இத்திட்டத்தில் 98 கிராம பஞ்சாயத்துக்களில் மண்மாதிரிகள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு டிஆரஓ பேசினார். இக்கூட்டத்தில், இணை இயக்குநர் (வேளாண்மை) (பொ).மரியரவி ஜெயக்குமார், தனி மாவட்ட வருவாய் அலுவலர் (காவேரி-வைகை-குண்டாறு).ரம்யாதேவி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்இராஜேந்திர பிரசாத், மாவட்ட சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post புதுக்கோட்டையில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் உரங்கள் கிடைக்க நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: