ஆகஸ்ட் 31ம் தேதி வரை வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம்: கலெக்டர் துவங்கி வைத்தார்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் வரும் ஆகஸ்ட் 31ம்தேதி வரை நடைபெறவுள்ள வயிற்றுப்போக்கு தடுப்பு முகாமினை கலெக்டர் அருண்ராஜ் தொடங்கி வைத்தார். செங்கல்பட்டு மாவட்டத்தில், தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி, மாவட்டத்திலுள்ள துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் நகரத்தை சுற்றி சிறப்பு கவனம் செலுத்தக்கூடிய முக்கிய இடங்களில் வைட்டமின் கி திரவம் வழங்கும் முகாம் தொடங்கியுள்ளது. இந்த முகாம் நேற்று துவங்கி வரும் 31ம்தேதி வரை புதன்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் நடைபெறவுள்ளது.

வயிற்றுப்போக்கு தடுப்பு முகாமின் இலக்கு, வயிற்றுப்போக்கினால் ஏற்படும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்புகளை முற்றிலும் தடுப்பதாகும். இம்முகாமிற்கான பயனாளிகள், அனைத்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆகும். அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,46,848 குழந்தைகளுக்கு வைட்டமின்-கி திரவம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த, முகாமின்போது அங்கன்வாடி பணியாளர்கள், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு 2 ஓஆர்எஸ் பொட்டலங்கள் மற்றும் 14 ஜிங்க் மாத்திரைகள் விநியோகிப்பர். கிராம, நகர்புற சுகாதார செவிலியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் ஓஆர்எஸ் கரைசல் தயாரிப்பு தொடர்பான செயல் விளக்கத்தினை கிராம அளவில் நடத்துவர். மேலும், அனைத்து பள்ளிகளிலும் கை கழுவுதல் குறித்து செயல் விளக்க கூட்டம் கிராம, நகர சுகாதார செவிலியர் நடத்துவர்.

அனைத்து துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் அங்கன்வாடி மையங்களில் ஓஆர்எஸ் துத்தநாக மாத்திரை காட்சிபடுத்தப்படும். வைட்டமின்-கி திரவம் வழங்குவதின் மூலம் வைட்டமின்-கி குறைபாட்டினால் ஏற்படும் பார்வை குறைபாடு, வயிற்றுப்போக்கு, தீவிர சுவாச தொற்று போன்றவை தடுக்கப்படுவதால், குழந்தைகள் நோய்வாய்ப்பட்டு இறப்பது தடுக்கப்படுகிறது. இந்தியாவில் வைட்டமின்-ஏ குறைபாடு பாதிப்பு உள்ளவர்கள் 17.54 சதவீதம். தமிழ்நாட்டில் வைட்டமின்-ஏ குறைபாடு பாதிப்பு உள்ளவர்கள் 7 சதவீதமாகும்.

வைட்டன்-ஏ திரவம் 6 மாதம் முதல் 60 மாதம் வரையிலான 2,30,924 குழந்தைகளுக்கு வழங்குவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம் 1.7.2024 முதல் 31.8.2024 வரை (புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) நடைபெறுகிறது. வைட்டமின்-ஏ திரவம் 6 மாதம் முதல் 11 மாதம் வரையுள்ள குழந்தைகளுக்கு 1மிலி, அளவும் 12 மாதம் முதல் 60 மாதம் வரையுள்ள குழந்தைகளுக்கு 2 மிலி அளவும் இந்த முகாமின்போது வழங்கப்படும்.

எனவே, பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு தவறாமல் வைட்டமின்-கி திரவம் கிடைப்பதை உறுதிசெய்து, மேற்கண்ட நோய்கள் வராமல் தடுப்பதற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. செங்கல்பட்டு அடுத்த ஆலப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட மலையடி வேண்பாக்கம் பகுதியில், செங்கல்பட்டு மாவட்ட சுகாதார துறை அலுவலர் பரணிதரன் தலைமையில் வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் நேற்று நடைபெற்றது.

இம்முகாமினை, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் தொடங்கி வைத்தார். இம்முகாம் மாவட்டம் முழுவதும் 1266 இடங்களில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றிய அவை தலைவர் திருமலை, அங்கன்வாடி மற்றும் சுகாதாரதுறை ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post ஆகஸ்ட் 31ம் தேதி வரை வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம்: கலெக்டர் துவங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: