புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆபத்தை உணராமல் படியில் தொங்கியபடி பயணிக்கும் மாணவர்கள்

*கூடுதலாக பேருந்துகள் இயக்க கோரிக்கை

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில் காலை, மாலை நேரத்தில் பல இடங்களில் பள்ளி செல்லும் மாணவர்களுக்கு போதுமான பேருந்துகள் இயக்கப்படாததால் மாணவ, மாணவிகள் படியில் தொங்கி கொண்டு ஆபத்தான நிலையில் பயணிக்கு நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் இருந்து நகர பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் வந்து செல்கின்றனர்.

இவர்கள் தினசரி அவர்கள் ஊருக்கு வரும் நகர பேருந்துகள் மூலம் பள்ளி கல்லூரிக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் போக்குவரத்து துறையில் இருந்து இயக்கப்படும் நகர பேருந்துகள் போதுமான அளவில் இல்லை. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் பல பேருந்துகளில் அதிக அளவில் பள்ளி மாணவ, மாணவிகள் வந்து செல்வதால் பேருந்துகளில் கூட்டம் அதிகாக உள்ளது. இதனால் பேருந்துகளில் படிகளில் நின்றுகொண்டு ஆபத்தை உணராமல் பயணிக்கின்றனர். சில பேருந்துகளில் படிகளில் தொங்கிக்கொண்டு மாணவர்கள் பயணிக்கின்றனர்.

மிகவும் ஆபத்தான நிலையில் பயணம் மேற்கொள்கின்றனர். குறிப்பாக கீரனூரில் இருந்து இயக்கப்படும் அனைத்து நகர பேருந்துகளிலும் மாணவ மாணவிகளின் கூட்டம் காலை மாலையில் அதிகரித்துள்ளது. இதேபோல் புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆகிய ஊர்களில் இருந்து இயக்கப்படும் நகர பேருந்துகளில் படிகளில் தொங்கியபடி மாணவர்கள் பயணிக்கின்றனர். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு இயக்கபட்ட பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது.

இதுவரை எந்த வழித்தடத்திலும் கூடுதலாக நகர பேருந்துகளை அதிகரிக்கவில்லை. மக்கள் தொகைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். தற்போது கிராமங்களில் இருந்து நகர் பகுதிக்கு பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இதனால் நகர பேருந்துகளிலும் ஆபத்தான நிலையில் மாலை நேரங்களில் மாணவர்கள் பயணிக்கின்றனர். தொடர்ந்து பல நாட்களாக கீரனூரில் இருந்து புதுக்கோட்டை நோக்கி செல்லும் நகர பேருந்தில் மாணவர்கள் தொங்கியபடி செல்கின்றனர்.

இதேபோல் அறந்தாங்கி நகர் பகுதியில் இருந்து புதுக்கோட்டை வரும் பேருந்தில் தொங்கியபடி சென்றனர். புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து சென்ற பேருந்துகளில் மாணவர்கள் தொங்கியபடி செல்கின்றனர். நடத்துனர் உள்ளே வாருங்கள் என்று கத்தினாலும் மாணவர்கள் செல்லவது இல்லை. மாணவர்கள் உள்ளே செல்ல முயற்சித்தாலும் உள்ளே செல்லமுடிவது இல்லை. செங்கல் அடிக்கியதுபோல் பேருந்தின் மாணவர்கள் இக்கின்றனர்.

நகர் பகுதியை சுற்றி பல நூறு கிராமங்கள் இருப்பதால் விவசாயிகள் அதிக அளவில் உள்ளனர். விவசாயிகள் உரங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் இவர்கள் செல்லும் பேருந்தில் ஏற்றுகின்றனர். நகர் பகுதியில் இருந்து ஐந்து மணிக்கு மேல் சில கிராமங்களுக்கு பேருந்தே கிடையாது. இதனால் வீட்டிற்கு செல்ல ஆபத்தை பொருட்படுத்தாமல் பேருந்தில் பிடிக்க இடம் கிடைத்தால் போதும் என்று மாணவர்கள் பயணித்து வருகின்றனர். இதற்கு தகுந்த நடவடிக்கை எடுத்து, கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என்று மாணவ மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆபத்தை உணராமல் படியில் தொங்கியபடி பயணிக்கும் மாணவர்கள் appeared first on Dinakaran.

Related Stories: