புதுடெல்லி: தனியார் நிறுவன ஊழியர்கள் ஓய்வு பெறும் போது ஈட்டிய விடுப்புக்காக பெறும் தொகை ரூ.3 லட்சத்திற்கு மேல் இருந்தால் வருமானவரி இதுவரை விதிக்கப்பட்டது. கடந்த பட்ஜெட்டில் இந்த வரம்பு ₹25 லட்சமாக உயர்த்தப்படும் என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். தற்போது இதற்கான ஆணையை மத்திய நேரடி வரிவிதிப்பு ஆணையம் நேற்று வெளியிட்டுள்ளது. இந்த வரிச்சலுகை ஏப்.1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
The post தனியார் ஊழியர்கள் ஈட்டிய விடுப்பு வரி உச்ச வரம்பு ₹25 லட்சமாக உயர்வு appeared first on Dinakaran.