எதிர்ப்புக்கு பணிந்தது ஒன்றிய அரசு: மருத்துவ மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வு ஒத்திவைப்பு

டெல்லி: மருத்துவ மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வு மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. தேசிய மருத்துவ ஆணையம் அடுத்த ஆண்டு முதல், எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு மாணவர்களுக்கு நெக்ஸ்ட் தேர்வை அமல்படுத்த உள்ளது. இதற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக நெக்ஸ்ட் தேர்வை கைவிடக் கோரி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். நெக்ஸ்ட் தேர்வு கிராமப்புற, சமூக ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என முதல்வர்கூறியிருந்தார்.

நாடு முழுவதும் மருத்துவ மாணவர்கள் நெக்ஸ்ட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ் இறுதியாண்டு மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வை தேசிய மருத்துவ ஆணையம் ஒத்திவைத்தது. ஒன்றிய சுகாதார அமைச்சகம் முடிவு எடுக்கும் வரை நெக்ஸ்ட் தேர்வு நடைபெறாது. மத்திய சுகாதார துறையிடம் இருந்து அடுத்த அறிவுறுத்தல் வரும் வரை தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்க தலைவர் ரவீந்திரநாத் கூறுகையில்; நெக்ஸ்ட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும்.

மருத்துவ மாணவர்கள் மத்தியில் நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிராக பெரும் கொந்தளிப்பு நிலவி வருகிறது. 2024 தேர்தலை மனதில் கொண்டு நெக்ஸ்ட் தேர்வை ஒன்றிய அரசு ஒத்திவைத்துள்ளது என கூறினார்.

The post எதிர்ப்புக்கு பணிந்தது ஒன்றிய அரசு: மருத்துவ மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: