புதுடெல்லி: உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பாஸ்மதி அல்லாத அரிசியை ஏற்றுமதி செய்வதற்கு கடந்த ஆண்டு ஜூலை 20ம் தேதி முதல் அரசு தடை விதித்தது. மேலும் சில நாடுகளின் உணவு பாதுகாப்பு தேவைக்கான வேண்டுகோளை ஏற்று குறிப்பிட்ட அந்த நாடுகளுக்கு மட்டும் அரிசியை ஏற்றுமதி செய்வதற்கு அரசு அனுமதித்து வருகின்றது. இந்நிலையில் தான்சானியா, டிஜிபவுட்டி மற்றும் கினியா பிசாவ் நாடுகளுக்கு பாஸ்மதி அல்லாத அரிசியை ஏற்றுமதி செய்வதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதேபோல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் வங்கதேசத்துக்கு வெங்காயகம் ஏற்றுமதிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
The post வெங்காயம், அரிசி ஏற்றுமதிக்கு அனுமதி appeared first on Dinakaran.