பார்வதிபுரம்- ராய்கடா இடையே குண்டும் குழியுமான தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய நீரில் நீச்சலடித்து நூதன போராட்டம்

*பஸ்சை மறித்து கட்டிலை போட்டு படுத்த வாலிபர்

திருமலை : பார்வதிபுரம்- ராய்கடா இடையே குண்டும் குழியுமாக உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தேங்கி உள்ள நீரில் நீந்தி நூதன முறையில் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆந்திர மாநிலம், பார்வதிபுரம்- ராய்கடா தேசிய நெடுஞ்சாலையொட்டி எலுரு நகர் உள்ளது. இவ்வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை வாகனங்கள் ெசல்ல முடியாத வகையில் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.

மேலும், மழைகாலங்களில் சாலைகளில் உள்ள பள்ளத்தில் மழை நீர் தேங்குவதால் இருசக்கர வாகனத்தில் செல்வோர் அதிகளவில் விபத்தில் சிக்கி வருகின்றனர். இதனால் அவ்வழியாக வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், வயதானோர் கடும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைத்து புதிய சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை மனு அளித்துள்ளனர். ஆனால் இந்நாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இந்நிலையில், நகரின் கிழக்குத் தெருவில் உள்ள கங்கனம்மா கோயில் அருகே அப்பகுதியை சேர்ந்தவர்கள் நேற்று திடீரென கொமரடாவில் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க கோரி சாலையில் தேங்கியுள்ள நீரில் நீந்தி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சாலையை முறையாக சீரமைக்க வேண்டும் என் பல்வேறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே போல் பார்வதிபுரம் பகுதியிலும் சாலையை சீரமைக்க கோரி அப்பகுதி மக்கள் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வாலிபர் பஸ்சை வழிமறித்து சாலையின் நடுவே கட்டிலை போட்டு படுத்து போராட்டம் நடத்தினார். இதனால் அப்பகுதியில் சிறுது நேரம் போக்குவரத்து பாதித்து பரபரப்பு ஏற்பட்டது.

The post பார்வதிபுரம்- ராய்கடா இடையே குண்டும் குழியுமான தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய நீரில் நீச்சலடித்து நூதன போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: