தூத்துக்குடி துறைமுகத்தில் முந்திரி ஏற்றுமதியாளரிடம் ரூ.6 கோடி மோசடி

தூத்துக்குடி: தூத்துக்குடி துறைமுகத்தில் மேற்கு ஆப்பிரிக்காவை சேர்ந்த முந்திரி ஏற்றுமதியாளர் ஆர்மெண்டோ சில்வா என்பவரிடம் ரூ.6 கோடி மோசடி செய்துள்ளனர். 30 கண்டெய்னர்களில் இருந்த ரூ.6 கோடி மதிப்பிலான முந்திரி கொட்டைகளை போலி ஆவணம் மூலம் மோசடி செய்ததாக புகார் அளித்துள்ளனர். 2 கண்டெய்னர்களுக்கு மட்டும் பணத்தை செலுத்தி விட்டு 30 கண்டெய்னர்களில் இருந்த முந்திரியை எடுத்துச் சென்றதாக குற்றச்சாட்டு வைத்துள்ளார். மோசடி செய்த கேரளாவைச் சேர்ந்த பிஜில் சுகுமார் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஆப்பிரிக்க ஏற்றுமதியாளர் புகார் அளித்துள்ளார்.

The post தூத்துக்குடி துறைமுகத்தில் முந்திரி ஏற்றுமதியாளரிடம் ரூ.6 கோடி மோசடி appeared first on Dinakaran.

Related Stories: