3 நாள் பயணமாக தமிழக ஆளுநர் ரவி டெல்லி சென்றார்

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் இருந்து இன்று காலை 11.25 மணியளவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மூலமாக 3 நாள் பயணமாக புதுடெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் செயலாளர், உதவியாளர் மற்றும் பாதுகாவலர் உடன் சென்றனர். இது, அவரது சொந்த பயணம் எனக் கூறப்படுகிறது. சென்னை விமானநிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் இருந்து இன்று காலை 11.25 மணியளவில் விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம் புதுடெல்லி செல்வதற்கு தயார்நிலையில் இருந்தது. இந்த விமானத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக புதுடெல்லிக்குப் புறப்பட்டு சென்றார்.

அவருடன் செயலாளர், உதவியாளர் மற்றும் பாதுகாவலர் ஆகியோரும் உடன் சென்றுள்ளனர். சென்னையில் இருந்து 3 நாள் பயணமாக புதுடெல்லி செல்லும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, வரும் 22ம் தேதி இரவு 8.15 மணியளவில் புதுடெல்லியில் இருந்து விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மூலமாக சென்னைக்கு திரும்பி வருகிறார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் 3 நாள் புதுடெல்லி பயணம், அவரது சொந்த பயணம் என்றும், இதில் வேறு எதுவும் முக்கியத்துவம் இல்லை எனக் கூறப்படுகிறது.

The post 3 நாள் பயணமாக தமிழக ஆளுநர் ரவி டெல்லி சென்றார் appeared first on Dinakaran.

Related Stories: