நாடாளுமன்றத்தில் வாக்களிக்க லஞ்சம் எம்பிக்களை வழக்கில் இருந்து விடுவிக்கும் தீர்ப்பு குறித்து மறுஆய்வு: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவிப்பு

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் வாக்களிப்பதற்காக லஞ்சம் பெறும் எம்பிக்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க முடியாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து மறு ஆய்வு செய்யப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. நாடாளுமன்ற,சட்டமன்ற அவைகளில் பேசுவதற்காக லஞ்சம் பெறுவது,அதே போல் லஞ்சம் வாங்கி கொண்டு குறிப்பிட்ட உறுப்பினர்களுக்கு ஆதரவாக வாக்களிப்பது போன்றவற்றில் எம்பி,எம்எல்ஏக்கள் மீது கிரிமினல் வழக்கு தொடுப்பதில் இருந்து விலக்கு அளித்து கடந்த 1998ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

2019ம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், இது குறித்து ஆராயும்படி 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு உத்தரவிட்டார். இந்நிலையில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த 1998ம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து மறு பரிசீலனை செய்யப்படும் என்றும் இதற்காக 7 நீதிபதிகள் கொண்டு அமர்வு அமைக்கப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நேற்று தெரிவித்தார்.

The post நாடாளுமன்றத்தில் வாக்களிக்க லஞ்சம் எம்பிக்களை வழக்கில் இருந்து விடுவிக்கும் தீர்ப்பு குறித்து மறுஆய்வு: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: