இந்நிகழ்ச்சியின் போது, இம்ரான் கான் கட்சியின் வழக்கறிஞர் ஷெர் அப்சல் கான் மார்வாட்டுக்கும், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (என்) கட்சியின் செனட்டர் அப்னான் உல்லா கானுக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், இம்ரான் கான் வக்கீல் மார்வாட், அப்னானை தாக்க, பதிலுக்கு அப்னானும் தாக்க, நிகழ்ச்சி நடந்த இடம் போர்க்களமானது. இதையடுத்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் விரைந்து வந்து இருவரையும் சமாதானப்படுத்தினர். இச்சம்பவம் தொடர்பான காணொளிக் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post பாகிஸ்தானில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியின் போது அடிதடி.. வீடியோ சமூக வலைதளத்தில் வைரல்..!! appeared first on Dinakaran.