பிரிக்ஸ் மாநாடு ரஷ்யாவில் இன்று துவக்கம் மோடியுடன் ஜின்பிங் பேச்சுவார்த்தை நடத்துவாரா? சீன வெளியுறவு அதிகாரி பதில் அளிக்காமல் தவிர்ப்பு

பீஜிங்: ரஷ்யாவில் இன்று துவங்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியுடன் அதிபர் ஜின்பிங் பேச்சுவார்த்தை நடத்துவாரா என்று கேள்விக்கு சீன வெளியுறவு துறை அதிகாரி பதில் அளிக்காமல் தவிர்த்து விட்டார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய கூட்டமைப்பு `பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் 16-வது உச்சிமாநாடு ரஷ்யாவின் தலைமையில் நடைபெற உள்ளது. ரஷ்யாவில் உள்ள காசான் பகுதியில் இன்றும்,நாளையும் நடைபெறுகிறது. பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் சீன அதிபர் ஜின்பிங்கும், பிரதமர் மோடியும் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தலாம் என தகவல்கள் வந்தன. இந்த நிலையில், சீன வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் லின் ஜியான் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, பிரிக்ஸ் மாநாட்டின் பின்னணியில் பிரதமர் மோடியும், சீன அதிபரும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என கூறப்படுவது பற்றி கேட்ட போது,‘‘ அப்படி ஏதாவது இருந்தால் உங்களுக்கு (நிருபர்கள்) தகவல் தெரிவிக்கப்படும்’’ என்று கேள்விக்கு பதிலளிக்காமல் தவிர்த்து விட்டார்.

The post பிரிக்ஸ் மாநாடு ரஷ்யாவில் இன்று துவக்கம் மோடியுடன் ஜின்பிங் பேச்சுவார்த்தை நடத்துவாரா? சீன வெளியுறவு அதிகாரி பதில் அளிக்காமல் தவிர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: