வியட்நாம் புதிய அதிபராக ராணுவ தளபதி தேர்வு

ஹனோய்: வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியில் நீண்டகாலமாக தலைவராக இருந்த நூயென் பூ டிரோங்க் மறைவுக்குப் பிறகு டோ லாம் அந்தப் பொறுப்பை ஏற்றார். அவர் அதிபர் பொறுப்பையும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் பொறுப்பையும் வகித்து வந்தார். நூயென் பூ டிரோங்க் மறைவுக்குப் பிறகு அங்கு அரசியல் எழுச்சி ஏற்பட்டு ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளை டோ லாம் தீவிரப்படுத்தினார். இரண்டு அதிபர்கள், மூன்று துணைப் பிரதமர்கள் உட்பட பெரிய பதவிகளில் இருந்த பலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. வியட்நாமில் அதிபர் பதவி என்பது சம்பிரதாயமான பதவி. கம்யூனிஸ்ட் கட்சி பொது செயலாளர் பதவி சக்திவாய்ந்த பதவியாகும். அதற்கு அடுத்த நிலையில் அதிபர் உள்ளார். இந்த நிலையில் வியட்நாம் நாடாளுமன்றம் நேற்று கூடியது. இதில்,புதிய அதிபராக லுவோங் குவாங் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ராணுவத்தில் தளபதியாக பணியாற்றியுள்ளார்.

The post வியட்நாம் புதிய அதிபராக ராணுவ தளபதி தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: