இந்த நிறுவனம் கடல் அகழ்வாராய்ச்சி மற்றும் துறைமுகம் பகுதிகளில் கட்டிடங்களை கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அப்படி கட்டுமான பணியில் ஈடுபட்ட போது சில முறைகேடுகள் நடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து துறைமுகம் அதிகாரிகள் சார்பில் அளித்த புகாரின் படி, சிபிஐ அதிகாரிகள் இன்று காலை ஜான் டி.நல் நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் சிபிஐ அதிகாரிகள் 2 குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
அப்போது துறைமுகம் பகுதியில் கட்டப்பட்ட கட்டிடங்கள் தொடர்பான ஆவணங்கள், அகழ்வாராய்ச்சி தொடர்பான ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் உறவினரான சூளைமேடு பஜனை கோயில் தெருவில் உள்ள சுகுமார் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை முடிந்த பிறகு தான் மோசடி தொடர்பாக முழுமையான தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது. சோதனை நடந்து வருவதால் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பான விபரங்களை சிபிஐ அதிகாரிகள் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
The post ஓபிஎஸ் உறவினர் வீட்டில் சிபிஐ சோதனை: வழக்கு தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றி விசாரணை appeared first on Dinakaran.
