ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான டிக்கெட் விற்பனை நடைபெறும் தேதிகள் அறிவிப்பு…!!

டெல்லி: ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான டிக்கெட் விற்பனை நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 13 வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5ம் தேதி முதல் நவம்பர் 19ம் தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான போட்டி அட்டவணை கடந்த ஜூன் 27ம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில், ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான டிக்கெட் விற்பனை நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

* சென்னை, டெல்லி, புனேவில் நடைபெறும் இந்தியா பங்கேற்கும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆக.31-ல் நடைபெறும்

* குவஹாத்தி, திருவனந்தபுரத்தில் நடைபெறும் இந்திய அணி போட்டிகளுக்கான டிக்கெட் ஆக.30-ல் விற்பனை செய்யப்படும்.

* தர்மசாலா, லக்னோ, மும்பையில் நடைபெறும் இந்திய அணி போட்டிகளுக்கான டிக்கெட் செப்.1-ல் விற்பனை செய்யப்படும்.

* கொல்கத்தா, பெங்களூருவில் நடைபெறும் போட்டிக்கு செப்.2, அகமதாபாத்தில் நடைபெறும் போட்டிக்கு செப்.3-ல் டிக்கெட் விற்பனை செய்யப்படும்.

* இந்திய அணியை தவிர்த்து மற்ற அணிகள் விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆக.25-ல் நடைபெறும்

* அரைஇறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை செப்டம்பர் 15-ம் தேதி நடைபெறும் என்று ஐசிசி அறிவித்துள்ளது.

The post ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான டிக்கெட் விற்பனை நடைபெறும் தேதிகள் அறிவிப்பு…!! appeared first on Dinakaran.

Related Stories: