சில்லி பாயின்ட்…

* ‘உலக கோப்பை டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பாபர் ஆஸமை தேர்வு செய்தது இமாலய தவறு. பாக். கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவே தோல்விக்கு முக்கிய காரணம். கேப்டன் பொறுப்புக்கு அவர் தகுதியானவர் இல்லை. ஷாகீன் அப்ரிடிக்கு பதிலாக மீண்டும் பாபரை அழைத்து வந்த ‘விஞ்ஞானி ஐன்ஸ்டீன்’ யாரென்று அறிய விரும்புகிறேன்’ என்று முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

* மகாராஷ்டிரா அணிக்காக ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய சமத் ஃபல்லா (39 வயது) தொழில்முறை கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இடது கை வேகப் பந்துவீச்சாளரான அவர் ரஞ்சி போட்டிகளில் 272 விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார். 2010ல் மகாராஷ்டிரா அணி சையத் முஷ்டாக் அலி டிராபியை வென்றதில் சமத் முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.

* யூரோ கோப்பை கால்பந்து தொடரின் டி பிரிவு லீக் ஆட்டத்தில் ஆஸ்திரியா அணி 3-1 என்ற கோல் கணக்கில் போலந்து அணியை வென்றது. இதே பிரிவில் நெதர்லாந்து – பிரான்ஸ் அணிகளிடையே நடந்த மற்றொரு லீக் ஆட்டம் 0-0 என டிராவில் முடிந்தது.

* லண்டனில் நடக்கும் சிஞ்ச் டென்னிஸ் சாம்பியன்ஷிப் ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா – மேத்யூ எப்டன் (ஆஸி.) இணை 6-7 (1-7), 6-7 (3-7) என்ற நேர் செட்களில் ரஷ்யாவின் கரென் கச்சனோவ் – டெய்லர் ஃபிரிட்ஸ் (அமெரிக்கா) ஜோடியிடம் போராடி தோற்றது.

* பாரிஸ் ஒலிம்பிக்ஸ்
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சுமித் நாகல் தகுதி பெற்றுள்ளார். இது குறித்து சமூக வலைத்தளத்தில் நேற்று தகவல் பகிர்ந்துள்ள நாகல், ‘பாரிஸ் ஒலிம்பிக்சில் பங்கேற்க அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றுள்ளேன் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். 2020 டோக்கியோ ஒலிம்பிக்சில் கலந்து கொண்டது எனது டென்னிஸ் வாழ்க்கையில் மகத்தான தருணமாக இருந்தது. அதன் பிறகு பாரிஸ் தொடரில் பங்கேற்க வேண்டும் என்பதே எனது லட்சியமாக இருந்தது. ஒற்றையர் பிரிவில் விளையாட ஆர்வமுடன் காத்திருக்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார். பாரிஸ் ஒலிம்பிக் போட்டி ஜூலை 26ம் தேதி தொட ங்கி ஆக ஸ்ட் 11 வரை நடைபெற உள்ளது.

The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.

Related Stories: