ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்வு

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையொட்டி ஆம்னி பேருந்துகள் டிக்கெட் விலையை பல மடங்கு உயர்த்தியுள்ளனர். கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு இன்று முதல் வரும் ஜன.1ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் வசிக்கும் வெளியூர் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணத்தை தொடங்கியுள்ளனர்.

கிறிஸ்துமஸ் பண்டிக்கைகாக தமிழக அரசு சார்பில் நேற்று வழக்கமாக இயக்கப்படும் 2100 பேருந்துகளுடன் கூடுதலாக 350 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டது. இன்றும் 290 சிறப்பு பேருந்துகள் இயக்கபடவுள்ளது. பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் கட்டணத்தை பல மடங்கு உயர்த்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அந்தவகையில் சென்னையில் இருந்து திருச்சி, கோவை, நாகை, நெல்லை செல்லும் ஆம்னி பேருந்துகளிலும் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். பண்டிகை காலங்களில் ஏற்படும் இந்த பிரச்ணைக்கு தீர்வுக்கான தமிழக போக்குவரத்து துறை ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடன் பேச்சுவார்த்தை நடத்தி கட்டணத்தை நிர்ணயித்தனர்.

அவர்கள் நிர்ணயத்த கட்டணம் அதிகமாக இருப்பதாக பலர் கூறிவந்த நிலையில் தற்போது பண்டிகை கால மக்கள் தேவை வைத்து இன்னும் கூடுதலாக சில ஆம்னி பேருந்துகள் கட்டணம் வசூலிக்கின்றனர். சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்ல படுக்கை வசியுடன் ஏசி பேருந்துக்கு அதிகபட்ச கட்டணம் ரூ.3,140 ஆக நிர்ணயித்து உள்ள நிலையில் தற்போது ரூ.3700 முதல் ரூ.4,000 வரை வசூலிக்கப்படுகிறது. அதேபோல நெல்லைக்கு செல்லும் பேருந்துகளில் படுக்கை வசியுடன் ஏசி பேருந்துக்கு அதிகபட்ச கட்டணம் ரூ.2,800 ஆக நிர்ணயித்து உள்ள நிலையில் தற்போது ரூ.3400 முதல் ரூ.3700 வரையும், திருச்சிக்கு படுக்கை வசியுடன் ஏசி பேருந்துக்கு அதிகபட்ச கட்டணம் ரூ.1,500 ஆக நிர்ணயித்து உள்ள நிலையில் தற்போது ரூ.1,800 முதல் ரூ.2000 வரை வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு ரூ.2,000 முதல் 4,000 கட்டணம் நிர்ணயித்து கட்டணம் வசூலித்துள்ளனர்.

பொதுமக்களின் தேவையை அறிந்து கட்டணம் அதிகளவில் வசூலிப்பதால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். ஒரு நிலையான கட்டணத்தை நிர்ணயத்தும் அதன்படி வசூலிக்காமல் பண்டிகை காலத்தை மையமாக வைத்து கட்டணத்தை உயர்த்தியுள்ளது. அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை வைக்கின்றனர்.

The post ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: