மினிமம் பேலன்ஸ் இல்லை என ரூ.8,500 கோடி அபராதம் வசூலித்த அரசு வங்கிகள்: மோடியின் சக்கரவியூகத்தை மக்கள் தகர்ப்பார்கள் என ராகுல் கண்டனம்

புதுடெல்லி: மக்களவையில் ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி நேற்று முன்தினம் கேள்விக்கு அளித்த பதிலில், 2024ம் நிதியாண்டில் தனிநபர் வங்கிக் கணக்குகளில் மாதாந்திர குறைந்தபட்ச வைப்புத் தொகை (மினிமம் பேலன்ஸ்) பராமரிக்காததால் ரூ.2,331 கோடியை பொதுத்துறை வங்கிகள் அபராதமாக வசூலித்திருப்பதாகவும், கடந்த 5 ஆண்டுகளில் இவ்வாறு மினிமம் பேலன்ஸ் இல்லை என ரூ.8,500 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ‘‘மோடியின் அமிர்த காலத்தில் சாமானிய மக்களின் காலி பாக்கெட்டுகளில் இருந்தும் பணம் கொள்ளை அடிக்கப்படுகிறது. தொழிலதிபர்களுக்கு ரூ.16 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்த மோடி அரசு, ‘மினிமம் பேலன்ஸ் இல்லை’ எனக் கூறி ஏழை மக்களிடம் இருந்து ரூ.8,500 கோடி அபராதமாக வசூல் செய்துள்ளது. மக்களின் முதுகெலும்பை உடைக்கும் முயற்சியாக மோடியின் சக்கர வியூகத்தில் இருக்கின்ற ஒரு கதவுதான் இந்த அபராத நடைமுறை. இந்திய மக்கள் அபிமன்யூக்கள் அல்ல, அர்ஜூனர்கள் என புரிந்துகொள்ளுங்கள். சக்கர வியூகத்தை உடைத்து உங்களது எல்லா அட்டூழியங்களுக்கும் எப்படி பதில் தர வேண்டும் என மக்களுக்கு தெரியும்” என்று பதிவிட்டுள்ளார்.

The post மினிமம் பேலன்ஸ் இல்லை என ரூ.8,500 கோடி அபராதம் வசூலித்த அரசு வங்கிகள்: மோடியின் சக்கரவியூகத்தை மக்கள் தகர்ப்பார்கள் என ராகுல் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: