×

விருச்சிகம்

30.5.2024 முதல் 5.6.2024 வரை

சாதகங்கள்: ராசிநாதன் செவ்வாய் ஆறாம் இடத்தில் பலத்தோடு அமையும் காலம். எதிரிகளை வெற்றி கொள்வீர்கள். திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடன்பிறப்புகள் உதவுவார்கள். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பணவரவு திருப்தியாக இருக்கும். கல்வி, கலை சம்பந்தமான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அரசாங்க ஆதரவும் உண்டு. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல நிறுவனங்களில் வேலை கிடைக்கும் குரு பகவான் உங்கள் களத்திர ராசியில் அமர்ந்து உங்கள் ராசியை பார்வையிடுவதால், எல்லா விஷயங்களும் நன்மையாகவே முடியும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு எழுத்துத்துறை, பேச்சுத்துறை, கலைத்துறையில் உள்ளவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும்.

கவனம் தேவை: நான்காம் இடத்தில் சனி அமர்ந்திருப்பதால், ஆரோக்கிய விஷயத்தில் கவனம் தேவை. களத்திர ஸ்தானத்தில் சூரியன் இருப்பதால், கணவன் அல்லது மனைவி ஆரோக்கியத்திலும் கவனமாக இருத்தல் வேண்டும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வேலைக்கேற்ற அங்கீகாரம் கிடைப்பதில் சிக்கல்கள் உண்டு.

பரிகாரம்: ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் அருகாமையில் உள்ள முருகன் ஆலயத்திற்குச் செல்லுங்கள். தீபமேற்றி முருகனை மனமார வணங்குங்கள்.

 

 

Tags : Scorpio ,
× RELATED விருச்சிகம்