×

கன்னி

2.5.2024 முதல் 8.5.2024 வரை

சாதகங்கள்: இதுவரை ஏழில் நீச நிலையில் இருந்த புதன் நீச நிலை நீங்கி
எட்டாம் இடத்தில் சுக்கிரன் சூரியனோடு இணைகிறார். மறைந்த புதனாக இருந்தாலும் நிறைந்த நன்மைகளைச் செய்வார். எனவே, கவலை வேண்டாம். ஆறாம் இடத்தில் உள்ள சனி உங்கள் ஆற்றலை மேம்படுத்துவார். தொழில் வளத்தைப் பெருக்குவார். பாக்கியஸ்தான குரு உங்கள் தைரிய வீரிய ஸ்தானத்தையும் ராசியையும் பார்வையிடுவதால் எந்த துன்பங்கள் வந்தாலும் அதற்கான தீர்வுகளும் உடனே கிடைத்து விடும்.

கவனம் தேவை: ராசியில் கேதுவும் சப்தமஸ்தானத்தில் ராகு செவ்வாயும் இணைந்து ராசியைப் பார்வையிடுவதால் வண்டி வாகனங்களில் போகும் பொழுது மிகுந்த எச்சரிக்கையோடு செல்ல வேண்டும். இரவுப் பயணத்தை தவிர்ப்பது நல்லது. தேவையில்லாத அலைச்சல்கள் அதிகரிக்கும். இனம்புரியாத கவலைகளும் நோய்களும் தலை எடுக்கும் என்பதால் கவனம் தேவை.

சந்திராஷ்டமம்: 6.5.2024 மாலை 5.44 முதல் 8.5.2024 இரவு 7.06 வரை சந்திராஷ்டமம் உண்டு. சந்திராஷ்டம தினத்தில் பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

பரிகாரம்: சனிக்கிழமை காகத்திற்கு ஒரு உருண்டை சாதம் வையுங்கள். பிதுர்
காரியங்களை மறக்க வேண்டாம்.

Tags : Virgin ,
× RELATED விளவங்கோடு இடைத்தேர்தல்...