×

கன்னி

6.6.2024 முதல் 12.6.2024 வரை

சாதகங்கள்: ராசிநாதன் பாக்கியஸ்தானத்தில் இருப்பதும் அங்கிருக்கும் குரு உங்கள் ராசியைப் பார்வையிடுவதும், உங்கள் ராசியிலே அமர்ந்துள்ள கேதுவின் வீரியத்தைக் குறைக்கும். பணத்திற்கு குறைவு இருக்காது. தகவல் தொழில்நுட்பம், எழுத்து, பேச்சுத் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல ஆதாயம் உண்டு. கலைஞர்களுக்கும் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சீமந்தம், உபநயனம், நிச்சயதார்த்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்பு அதிகம். நெருங்கிய உறவினர்கள் உதவுவார்கள். சுப முயற்சிகள் வெற்றி அடையும். சிலர் வசதியான வீட்டிற்கு மாறுவார்கள். குழந்தை கல்வி முதலிய விஷயங்களில் மகிழ்ச்சி ஏற்படும். சந்தான பாக்கியத்திற்காக காத்திருக்கும் தம்பதிகளுக்கு அதற்கான வாய்ப்பு அதிகம். வெளிநாட்டு வேலை முயற்சிகள் வெற்றி பெறும்.

கவனம் தேவை; ஆறாம் இடத்தில் அமர்ந்துள்ள சனி பகவான் உங்களுக்கு மிக சாதகமான நற்பலன்களைத் தருவார். வேலை மாற்றங்கள் உங்கள் வளர்ச்சிக்கு உதவலாம். ராசியில் கேது ஏழாம் இடத்தில் ராகு அஷ்டமத்தில் வீரியம் பெற்ற செவ்வாய் முதலிய சாதகமற்ற கிரக நிலைகளையும் கணக்கில் கொண்டு கவனமாக இருக்க வேண்டும். பேச்சில் வீரியம் அதிகரித்து பகையைப் பெற்றுத் தரும் என்பதால், கவனமாகப் பேசவும்.

பரிகாரம்: சனிக்கிழமை காகத்திற்கு ஒரு உருண்டை சாதம் வையுங்கள். பிதுர் காரியங்களை மறக்க வேண்டாம்.

 

 

 

 

 

Tags : Virgin ,
× RELATED குமரி மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை