×

மிதுனம்

25.4.2024 முதல் 1.5.2024 வரை

சாதகங்கள்: ராசிநாதன் புதன் பத்தாம் இடத்தில் இருப்பது ஒரு வகையில் சிறப்பு. கேந்திராதிபத்திய தோஷம் குறைவதால் சில சுப பலன்கள் ஏற்படும் வாய்ப்புண்டு. குரு விரயஸ்தானத்திற்கு வருவதால், வருமானத்தில் சில எதிர்பாராத செலவுகள் ஏற்படும். மூன்றுக்குரிய சூரியன் மேஷத்தில் உச்சம் பெற்று உங்களுடைய பூர்வ புண்ணிய ஸ்தானத்தைப் பார்ப்பதால், தெய்வ தரிசனங்கள் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு சாதகமான வாரம் இந்த வாரம். பயணங்களால் ஆதாயம் உண்டு.

கவனம் தேவை: குடும்பத்தில் தேவையில்லாத வாக்குவாதங்கள் ஏற்படலாம். மனதில் நிம்மதி குறையலாம். சுப காரிய முயற்சிகளை சற்றுத் தள்ளிப் போடவும். முன் கோபத்தோடு அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். நீங்கள் செய்யும் சிறு தவறுகள் பெரும் பிரச்னையைத் தரலாம். யாரையும் நம்பி செயல்பட முடியாத நிலை உண்டு என்பதால் எச்சரிக்கை தேவை.

சந்திராஷ்டமம்: 30.4.2024 காலை 10.37 முதல் 2.5.2024 பிற்பகல் 2.32 வரை சந்திராஷ்டமம் உண்டு. சந்திராஷ்டம தினத்தில் பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

பரிகாரம்: அம்பிகையை வழிபட நம்பிக்கை பிறக்கும். வாரந்தோறும் சனிக்கிழமை பைரவருக்கு தீபம் ஏற்றுங்கள். அனைத்தும் நலமாகும்.

Tags : Gemini ,
× RELATED மிதுனம்