×

மிதுனம்

9.5.2024 முதல் 15.5.2024 வரை

சாதகங்கள்:இதுவரை லாப ராசியில் இருந்த சூரியன் வார இறுதியில் குருவோடு விரயஸ்தானத்தில் இணைகின்றார். பத்தில் செவ்வாய் பலமாக இருப்பதால் தீவிரமாக முயன்றால் நீங்கள் நினைத்தது நிறைவேறும் கஷ்டத்திற்கேற்ற வருமானம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். புதிய கட்டடங்களில் தொழில் மாற்றம் நடைபெற வாய்ப்புண்டு. குருவின் பார்வை 4,6,8 இடங்களில் இருப்பதால், அடிப்படை வசதிகள் அதிகரிக்கும். இரண்டாவது தொழில் அல்லது சேவையின் மூலம் கூடுதல் வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு. பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு ஆதாயம் உண்டு. பிள்ளைகளின் திருமணம் முதலிய சுபகாரியங்களுக்கு ஏற்ற நேரம்.

கவனம் தேவை: நான்காம் இடத்தில் கேது இருப்பதால், எடுத்த காரியங்களில் சிறுசிறு தடங்கல்கள் உண்டு. வண்டி வாகனங்கள் செலவு வைக்கலாம். பூர்வீக சொத்து பிரச்னைகள் ஏதேனும் ஒரு வகையில் தலைதூக்கலாம். சகோதர உறவுகளில் எச்சரிக்கை தேவை.

பரிகாரம்: அம்பிகையை வழிபட நம்பிக்கை பிறக்கும். வாரந்தோறும் சனிக்கிழமை
பைரவருக்கு தீபம் ஏற்றுங்கள். அனைத்தும் நலமாகும்.

Tags : Gemini ,
× RELATED மிதுனம்