×

மிதுனம்

23.5.2024 முதல் 29.5.2024 வரை

சாதகங்கள்: ராசிநாதன் புதன் 12-ல் இருக்கின்றார். பெரும்பாலான கிரகங்கள் 12-ல் இருந்தாலும், சுக்கிரன் 12-ல் இருப்பதால் அதுவும் குருவோடு இணைந்து இருப்பதால் சில நன்மைகள் ஏற்படும். வீடு மாற்றம் நடக்கலாம். உத்தியோக உயர்வு சிலருக்கு கிடைக்கும். தாய்வழி ஆதரவு உண்டு. தொழிலை உருவாக்கும் முயற்சி வெற்றி பெறும். பாக்கியஸ்தானத்தில் சனி இருப்பதால், எப்படியாவது தொழிலை முன்னேற்ற வேண்டும் என்ற திட்டங்களுக்கான வழிகள் பிறக்கும். பிள்ளைகளின் திருமணம் முதலிய சுபகாரியங்களுக்கு ஏற்ற நேரம்.

கவனம் தேவை: நான்கு கிரகங்கள் விரயஸ்தானத்தில் இருப்பதால் எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சீர்கெடும் வாய்ப்புண்டு. மருத்துவச் செலவுகள் அதிகரிக்கலாம் என்பதாலும் எச்சரிக்கையுடன் இருக்கவும். வண்டி வாகனங்களில் மிகுந்த கவனம் தேவை. காரணம் கேதுவை செவ்வாயும் ராகுவும் பார்க்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

சந்திராஷ்டமம்: 27.5.2024 மாலை 4.06 முதல் 29.5.2024 இரவு 8.06 வரை சந்திராஷ்டமம் உண்டு. சந்திராஷ்டம தினத்தில் பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

பரிகாரம்: ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அருகாமையில் உள்ள கோயிலில் நெய் தீபம் ஏற்றுங்கள். அல்லது வீட்டிலேயே பூஜை அறையில் நெய் தீபம் ஏற்றலாம்.

Tags : Gemini ,
× RELATED மிதுனம்