×

மிதுனம்

6.6.2024 முதல் 12.6.2024 வரை

சாதகங்கள்: பூர்வ புண்ணியஸ்தானாதிபதி சுக்கிரன் பலமாக இருக்கின்றார். அவர் 12ல் இருந்தாலும், நன்மையையே செய்வார். வருமானத்தில் குறைவில்லை. அலைச்சல்களும் பணிச்சுமையும் அதிகமாக இருந்தாலும், அதற்கு ஏற்ற உயர்வு கிடைக்கும் வாரம் இது. கலைத்துறையினர் அதிக வாய்ப்புகளைப் பெறுவார்கள். காரணம், சுக்கிரன் சுபபலத்தோடு இருக்கின்றார். வார இறுதியில் ராசிநாதன் புதன் ராசியில் பலம் பெறுகின்றார். அது யோகமான அமைப்பு. ஆரோக்கியம் சீராகும். வெளிநாட்டிலிருந்து நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களுடன் இணைந்து பணியாற்றும் நல்வாய்ப்புகள் உண்டு. அவர்களால், உதவியும் உண்டு. பிள்ளைகளின் திருமணம் முதலிய சுபகாரியங்களுக்கு ஏற்ற நேரம்.

கவனம் தேவை: விரய ஸ்தானத்தில் குரு இருக்கின்றார். உறவினர்களிடம் தேவையற்ற உரசல்கள் வேண்டாம். வாக்குவாதங்களால் கஷ்டப்பட வேண்டி இருக்கும். 12ல் சூரியனும் இருப்பதால், அலைச்சல்கள் ஏற்படலாம். திருமண முயற்சிகளில் நிதானம் தேவை. தேவையற்ற விதத்தில் பணம் செலவழியும். திடீர் பயணங்கள் ஏற்படலாம்.

பரிகாரம்: ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும், அருகாமையில் உள்ள கோயிலில் நெய் தீபம் ஏற்றுங்கள். அல்லது வீட்டிலேயே பூஜை அறையில் நெய் தீபம் ஏற்றலாம்.

 

 

 

Tags : Gemini ,
× RELATED மிதுனம்