×

மிதுனம்

30.5.2024 முதல் 5.6.2024 வரை

சாதகங்கள்: சுக்கிரன் அனுகூலமாக இருக்கின்றார். வருமானம் அதிகரிக்கும். பாக்கியஸ்தானத்தில் சனி இருப்பதால், உங்கள் திறமைக்கேற்ற அங்கீகாரமும் உதவிகளும் கிடைக்கும். சிலர் வெகுகாலமாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. லாபஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதால், தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். குறைந்த விலைக்கு வாங்கி போட்ட இடங்கள் நல்ல விலைக்கு விற்பனையாகும். சிலர் சொந்த கட்டிடத்திற்கு தொழிலை மாற்றும் முயற்சி வெற்றி பெறும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு வேலையும் பதவியில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்ற வாய்ப்புகளும் கிடைக்கும். வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் இடமிருந்து வரும் செய்திகள் மகிழ்ச்சி அளிக்கும். பிள்ளைகளின் திருமணம் முதலிய சுபகாரியங்களுக்கு ஏற்ற நேரம்.

கவனம் தேவை: சுக்கிரன் 12ஆம் இடத்தில் குருவோடு அமர்ந்திருக்கிறார். உறவினர்களிடம் கவனமாக இருக்கவும். தேவையற்ற வாக்குவாதங்கள் நடந்து குடும்ப ஒற்றுமை குறையலாம். 12ஆம் இடத்தில் சூரியனும் இருப்பதால், தேவையற்ற விதத்தில் பணம் செலவழியும். திடீர் பயணங்கள் ஏற்படலாம்.

பரிகாரம்: ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அருகாமையில் உள்ள கோயிலில் நெய் தீபம் ஏற்றுங்கள். அல்லது வீட்டிலேயே பூஜை அறையில் நெய் தீபம் ஏற்றலாம்.

Tags : Gemini ,
× RELATED மிதுனம்