×

மிதுனம்

26.9.2024 முதல் 2.10.2024 வரை

சாதகங்கள்: பஞ்சமஸ்தானத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்று இருக்கின்றார். அதோடு அவர் உங்கள் லாபஸ்தானத்தையும் பார்ப்பது சிறப்பு. தேவையான அளவுக்கு வருமானம் இருப்பதால், பணப் பிரச்னை இருப்பதற்கு வழி இல்லை. சுபச் செலவுகள் உண்டு. கலைஞர்களுக்கு ஏற்றமான மாதம். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆடை ஆபரணத் தொழில் செய்பவர்களுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். ராசிக்குரிய புதன் நான்காம் இடத்தில் ஆட்சி பலத்தோடு அமர்ந்திருப்பதால், உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். கொஞ்சம் யோசனையோடு செயல்பட்டால் வெற்றியை தக்க வைத்துக் கொள்ள முடியும்.

கவனம் தேவை: ராசியில் பகை ரோக ருணஸ்தானாதிபதி செவ்வாய் அமர்ந்திருப்பதால், ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள், ரத்த அழுத்தப் பிரச்னைகள் இருப்பவர்களுக்கு நோயின் தாக்கம் அதிகரிக்கலாம். மருந்து மாத்திரைகளை ஒழுங்காக எடுத்துக் கொள்வது நல்லது. உங்கள் பொறுப்புகளில் கவனமாக இல்லாவிட்டால் சில சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

பரிகாரம்: சுகஸ்தானத்தில் சூரியன் இருப்பதால், தினம் சூரிய காயத்ரி சொல்லுங்கள். சூரிய குல ராமரை வணங்குங்கள்.

Tags : Gemini ,
× RELATED மிதுனம்