×

அவந்திகா அறிமுகமாகும் மலையாள ‘ஆரம்பம்’

இயக்குனர் சுந்தர்.சி, குஷ்பு காதல் திருமணம் கடந்த 2,000ல் நடந்தது. அவர்களுக்கு அவந்திகா, அனந்திதா ஆகிய மகள்கள் இருக்கின்றனர். இதில் அவந்திகா சினிமாவில் நடிக்க விரும்புவதாக கடந்த 2022ல் தெரிவித்திருந்தார். லண்டனில் நடிப்பு சம்பந்தப்பட்ட படிப்பை முடித்துவிட்டதாகவும், தான் ஹீரோயினாக நடிக்க பெற்றோர்கள் யாரிடமும் சிபாரிசு செய்ய விரும்பவில்லை என்றும் சொல்லியிருந்தார். இதையடுத்து கடந்த ஆண்டு நகைக்கடை விளம்பரம் ஒன்றில் தோன்றிய அவந்திகா, தற்போது மலையாளத்தில் ‘ஆரம்பம்’ என்ற படத்தில் அறிமுகமாகிறார்.

முக்கிய வேடங்களில் சரிதா, அல்தாஃப் சலீம், இந்திரன்ஸ், விஜயராகவன், கலாபவன் சாஜோன் நடிக்கின்றனர். சுஜேஷ் இயக்குகிறார். தொடக்க விழா பூஜை கேரளாவில் நடந்தது. அவந்திகா தமிழ்ப் படத்தில் அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென்று மலையாள படத்தில் அறிமுகமாகும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Avantika ,Sundar.C ,Khushbu ,Anantita ,London ,Saritha ,Altaf ,
× RELATED மோடியா, ராகுலா என்ற கேள்விக்கு பரபரப்பாக பதிலளித்த டாப்ஸி