×

தங்கள் படத்தின் புரமோஷனை தவிர்த்த ஆண்ட்ரியா, அனுபமா பரமேஸ்வரன்

சென்னை: தமிழில் ஒரு படம் திரைக்கு வருகிறது என்றால், அதன் இசை மற்றும் டீசர், டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி, பத்திரிகையாளர் சந்திப்பு, பிரீ-ரிலீஸ் ஈவென்ட் போன்ற புரமோஷன் நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம். சில படங்களின் ஹீரோ, ஹீரோயின்கள் தாங்கள் நடித்த படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது இல்லை. தனது படங்களின் எந்த நிகழ்ச்சியிலும் அஜித் குமார் பங்கேற்பது இல்லை. அதுபோல் சில தமிழ் நடிகைகள், தாங்கள் நடிக்கும் படங்களின் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளக்கூடாது என்ற கொள்கையை கடைப்பிடித்து வருகின்றனர். அப்படி நிகழ்ச்சிக்கு கண்டிப்பாக வரவேண்டும் என்றால், அதற்கென்று தனியாக பணம் கேட்கின்றனர். இதை சில தயாரிப்பாளர்கள் வெளிப்படையாக பேசினாலும், பலர் அதுபற்றி வெளியில் பேச தயங்குகின்றனர்.

கடந்த மாதம் வெளியான ‘லாக்டவுன்’ படம் குறித்து, அப்படத்தின் ஹீரோயின் அனுபமா பரமேஸ்வரன் தனது சோஷியல் மீடியாவில் கூட ஒரு பதிவு வெளியிடவில்லை. கடந்த வாரம் வெளியான ‘கா’ படம் குறித்து, அப்படத்தின் ஹீரோயின் ஆண்ட்ரியா எதுவும் பதிவிடவில்லை. இவ்விரு படங்களும் ஹீரோயின்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்ட படங்கள் என்பதால், கதை கேட்டு பிடித்துதான் அப்படங்களில் நடித்து கொடுத்திருப்பார்கள். படம் எப்படி வந்திருந்தாலும், குறைந்தபட்ச வரவேற்புக்காவது சம்பந்தப்பட்ட நடிகைகள் தங்கள் சோஷியல் மீடியாவில் பதிவிட்டிருக்க வேண்டும் என்பது இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் கோரிக்கையாக இருக்கிறது என்று கூறப்படுகிறது.

Tags : Andrea ,Anupama Parameswaran ,Ajit Kumar ,
× RELATED கிளாமருக்காக கயாடு எடுத்த திடீர் முடிவு